சென்னை : நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் சென்னை வளசரவாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 70.ஜூனியர் பாலையா, பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன் ஆவார்.1975ம் ஆண்டு “மேல்நாட்டு மருமகள்” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜூனியர் பாலையா.