₹1.63 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

போச்சம்பள்ளி, நவ.2: போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் மூலம் 2066 கிலோ கொப்பரை ₹1 லட்சத்து 63 ஆயிரத்து 563க்கு ஏலம் போனது. போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் விற்பனை கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் முன்னிலையில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, புலியூர், தாதம்பட்டி, வேலம்பட்டி, தட்டக்கல், அரசம்பட்டி, அகரம், செல்லம்பட்டி, பாரூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று கொப்பரைகளை விற்பனைக்காக குவித்தனர். இ-நாம் முறையில் கொப்பரை கொள்முதல் செய்ய திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் திரண்டனர். கொப்பரை தரத்தை பொறுத்து கிலோ ₹86.66க்கு விலை போனது. 2066 கிலோ கொப்பரை ₹1 லட்சத்து 63 ஆயிரத்து 563க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹1.63 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: