ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கடன் இந்தியர்கள் என்ற ஒற்றுமையின் கீழ் வாழ்வதே நமக்கு பெருமை

அரியலூர்: அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி தேசிய ஒருமைப்பாட்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது; சுதந்திரம் பெற்றபோது 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை இந்தியா என்னும் ஒரேகுடையின் கீழ் கொண்டு வந்த பெருமை வல்லபாய் பட்டேலே சேரும். மதம், மொழி, இனம் ஆகியவற்றால் நாம் வேறு பட்டிருந்தாலும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையின் கீழ் வாழ்வதே. நமக்கு பெருமை. நமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை அமைதியான வழியில் எவ்வித வன்முறையும் இன்றி தீர்த்துக் கொள்வதில் உலகிற்கு நாம் வழிகாட்டியாக இருக்கிறோம். இந்தியாவின் இரும்பு மனிதருக்கு உலகின் உயரமான சிலையை வடிவமைத்து பெருமைப்படுத்தியுள்ளது மத்திய அரசு. எனவே மாணவர்கள் அனைத்து மக்களிடம் மட்டுமல்ல அனைத்து உயிரி னங்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி ,செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் சரண்யா, கண்ணகி மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கடன் இந்தியர்கள் என்ற ஒற்றுமையின் கீழ் வாழ்வதே நமக்கு பெருமை appeared first on Dinakaran.

Related Stories: