போளூர் ரயில்வே நிலையம் ₹5.94 கோடியில் சீரமைப்பு அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டம் அம்ரித் பாரத் திட்டத்தில்

போளூர், நவ. 1: போளூர் ரயில்வே நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தில் ₹5.94 கோடியில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் அம்ரித் பாரத் திட்டத்தில் போளூர் ரயில்வே நிலையம் ₹5.96 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ரயில்வே நிலைய முகப்பு பகுதி அதி நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை எப்போதும் திறந்த நிலையில் இருந்த மெயின் கேட் இனி ரயில் வரும் நேரங்களில் மட்டும் திறந்து மூடும் நிலையில் அமைக்கப்படுகிறது. இதுதவிர வாகனங்கள் நிறுத்த கட்டணப் பார்க்கும் அமைக்கும். இது தவிர வாகனங்கள் நிறுத்த கட்டணத்தில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே உள்ள பயணியர் காத்திருப்பு இருப்பிடம் இதுவரை யாருேம பயன்படுத்த விடாமல் மூடப்பட்டுள்ளது. இப்போது அந்த இருப்பிடமும் சீரமைக்கப்பட்டு வருகிறது. ரயில்வே மேம்பாலம் நடைமேடை உட்பட அனைத்து நடைபாதைகள் என எல்லா இடங்களிலும் டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் ஓய்வெடுக்க குடியிருப்பு வசதியும் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

The post போளூர் ரயில்வே நிலையம் ₹5.94 கோடியில் சீரமைப்பு அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டம் அம்ரித் பாரத் திட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: