மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழர்கள், தமிழக கலாசாரம், மொழி, இலக்கியம், வழிபாடு உள்ளிட்ட பிரச்னைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கிளப்பி வருகிறார்.மேலும், தமிழக அரசு கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கும் அவர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக நீட் பிரச்னைக்காக தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் குற்றச்சட்டு எழுந்தது.

கூட்டுறவு சங்கங்களுக்கான பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது, முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல் இருப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளுநர் மீது அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.ஆனால் தேவையில்லாமல், மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவை குறித்து கருத்துக்களை கூறி, மக்களை அவர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தமிழக ஆளுநருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநர் மாளிகை முன்பு பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், சர்க்காரியா ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை வகுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. 2020ம் ஆண்டு முதல் 54 கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கும் பரிந்துரை மற்றும் 12 சட்ட மசோதக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் என்றும் இது பதவியை துஷ்ப்ரயோகும் செய்வது மற்றும் மக்களின் விருப்பதை குறைத்து மதிப்பிடும் செயல் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

The post மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: