கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் மது கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வந்தன. இதை கண்டித்து இன்று வி.வேலூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று கிராம பொதுமக்களும் ஒரே இடத்தில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை டிஎஸ்பி சுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மது கடையால் ஏழை எளிய குடும்ப பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும், மது கடையை திறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: உடுமலையில் கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.
