மணீஷ் சோசோடியா மீதான வழக்கை 6 மாதத்தில் இருந்து 8 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவ உ அளித்துள்ளது. விசாரணை மந்தமாக நடந்தால் மணீஷ் சிசோடியா ஜாமின் கோரி 3 மாதத்துக்குள் மனு தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா கடந்த 247 நாட்களாக சிறையில் உள்ளார். மதுபான கொள்கை வழக்கில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்குகளில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை 6 முதல் 8 மாதங்களில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை மெதுவாக நடந்தால், மணிஷ் சிசோடியா மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
338 கோடி நிதி பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு, அமலாக்கதுறையால் (ED) மார்ச் 9-ம் தேதி டெல்லி திகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. தற்போது அவர் இரண்டு வழக்குகளிலும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.
