கேரளாவில் குண்டு வெடிப்பு எதிரொலி தமிழ்நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு: வாகன சோதனையில் ஈடுபட அனைத்து எஸ்பிக்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: கொச்சி அருகே களமச்சேரியில் நேற்று கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐஜிக்கள் மற்றும் அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கேரளாவை ஒட்டிய தமிழ்நாடு எல்லைகளில் வழக்கத்தை விட கூடுதல் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சுற்றினால் அவர்களை பிடித்து விசாரணை நடத்த வேண்டும். வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை பகுதிகள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் வழக்கத்ைத விட கூடுதலாக பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இரவு நேரம் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. டிஜிபியின் உத்தரவை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர ரோந்து பணி, வாகன சோதனைகளில் ேநற்று மதியம் முதல் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மாவட்ட எல்லைகள், மாநில எல்லைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி ேமற்கொண்டு வருகின்றனர். இதேபோல சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடமைகள் சோதனையிடப்பட்டன. ரயில் பெட்டிகளிலும் மர்ம பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சோதிக்கப்பட்டது.

The post கேரளாவில் குண்டு வெடிப்பு எதிரொலி தமிழ்நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு: வாகன சோதனையில் ஈடுபட அனைத்து எஸ்பிக்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: