அரசு பள்ளியில் அகப்பயிற்சி முகாம்

காவேரிப்பட்டணம், அக்.29: காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படையின் வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதனையொட்டி, வேலம்பட்டி அருகே மஜித் கொல்லஅள்ளி கிராமத்திற்கு களப்பயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமில் 33 மாணவர்கள் கலந்து கொண்டனர். விவசாய பண்ணையின் உரிமையாளர்கள் வெங்கடேசன் -ஆர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். தேனி வளர்த்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், மாந்தோப்பில் ஊடு பயிர் சாகுபடி, நிலத்தில் களைகளை நீக்குதல், ஆடு -மாடுகள் வளர்ப்புல் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றில் மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முகாம் நிறைவு நாளில் தலைமை ஆசிரியர் வேந்தன் கலந்து கொண்டு மாணவர்களின் செய்முறை பயிற்சியினை கண்டு பாராட்டினார். மாணவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளித்த வெங்கடேசன் -ஆர்த்தி ஆகியோருக்கு பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் ஆசிரியைகள் சித்ரா, லாவண்யா மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post அரசு பள்ளியில் அகப்பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: