தஞ்சை பெரிய கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி சிவலிங்கத்திற்கு 1000 கிலோ அரிசியால் வடித்த சாதத்தால் அன்னாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர்: உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி, சிவலிங்கத்திற்கு 1000 கிலோ அரிசியால் வடித்த சாதத்தால் அன்னாபிஷேகம், 750 கிலோ எடையிலான அனைத்து வகை பழங்கள், 36 வகை காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்து விவசாயம் செழித்து, உலகில் பசி, பட்டினியில்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு கிடைத்திட சிறப்பு வழிபாடு, ஓம் நமச்சிவாயா என்கிற முழக்கத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி 13 அடி உயரமுடைய சிவலிங்கத்திற்கு பக்தர்களால் வழங்கப்பட்ட 1000 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதம் சிவலிங்கம் முழுவதிலும் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

750 கிலோ எடையிலான அனைத்து வகை பழங்கள், 36 வகை காய்கறிகள் சிவலிங்கம் முழுவதிலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்கிற முழக்கத்துடன் அபிஷேகப்பிரியரான சிவனை வழிபட்டனர். இன்று சந்திரகிரகணம் என்பதால் இரவு 7.45 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சரியாக 8 மணிக்கு நடைசாத்தப்பட்டு, நாளை காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். 1000 கிலோ சாதத்தையும் இரவு பிரித்தெடுத்து நீர்நிலைகளில் மீன்கள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கப்படும்.

The post தஞ்சை பெரிய கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி சிவலிங்கத்திற்கு 1000 கிலோ அரிசியால் வடித்த சாதத்தால் அன்னாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: