சென்னிமலை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலை: சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக் கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 18ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் நேற்று முன்தினம் இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை, மாலையில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் கம்பத்துக்கு தினமும் காலையில் பெண்கள் புனித நீர் ஊற்றி வருகின்றனர். வருகிற 1ம் தேதி இரவு 8 மணிக்கு மாவிளக்கு திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோயிலுக்கு வருகிறார்கள். மறுநாள் 2ம் தேதி காலையில் பொங்கல் விழா நடைபெறுகிறது.

The post சென்னிமலை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: