ரஜினி வீட்டில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் விழாவில் பங்கேற்றனர். ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். அப்போது தனுஷின் மகன் லிங்கா மற்றும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சினிமா பிரபலங்களை பொறுத்தவரை நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டார். இதுதவிர நடிகை மீனா, பழம்பெரும் நடிகை லதா உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்களும் ரஜினிகாந்த் வீட்டு நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
The post ரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்… ஓபிஎஸ் முதல் தமிழிசை வரை படையெடுத்து வந்த பிரபலங்களின் போட்டோஸ்..!! appeared first on Dinakaran.
