விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி: கோயில்களில் விரல் பிடித்து நெல், அரிசியில் ‘அ’ எழுத வைத்தனர்

சென்னை: விஜயதசமி நாளான நேற்று தமிழ்நாட்டில் உள்ள 2384 அங்கனவாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதற்கேற்ப தொடக்கப் பள்ளிகள், அங்கன்வாடிகள், நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் நேற்று வருகைபுரிந்தனர். அதேபோல தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் என்று இல்லாமல் ஆரம்பபள்ளிகளிலும் குழந்தைகள் சேர்க்கை நேற்று நடந்தது. கடந்த ஆண்டில் விஜயதசமி நாளில் தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட குழந்தைகளின் விவரம் இன்று தெரியவரும். கடந்த நான்கு நாட்களாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இன்றும் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோயில், வடபழனி கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் காலை இந் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோரின் மடியில் குழந்தைகள் அமரவைக்கப்பட்டு, நெல் மற்றும் அரிசியில் ‘அ’ எழுத்தை எழுத வைத்தனர்.

The post விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி: கோயில்களில் விரல் பிடித்து நெல், அரிசியில் ‘அ’ எழுத வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: