தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி: அரிசியில் தமிழ் எழுத்துகளை எழுதி குழந்தைகள் எழுத்துப் பயிற்சி

கன்னியாகுமரி: விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கோயில்களில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் அரிசியில் தமிழ் எழுத்துக்களை எழுதி குழந்தைகள் எழுத்து பயிற்சி தொடங்கின. நவராத்திரிக்கு பிறகு 10-வது நாளான இன்றைய தினம் விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விஜயதசமி அன்று மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசை கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினாள் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குழந்தைகளின் கை பிடித்து நெல்லில் ஆ என்று கற்றுக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதுமாக உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களில் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் கைகளை பிடித்து அரசியில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எழுத்து பயிற்சியை கற்று தந்தனர். நெல்லையப்பர் கோயிலில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகளுடன் தட்டி பரப்பிய அரிசியில் இறைவன் நாமத்துடன் அறுசுவடியில் எழுத வைத்தனர். புதுக்கோட்டையில் பள்ளிக்கு வந்த புதிய மாணவர்களை ஆசிரியர்கள் மாலை அணிவித்தும், திருக்குறள் புத்தகத்தை கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். கோவை, திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கோயில்களில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் அரசியில் தமிழ் எழுத்துக்களை எழுதி குழந்தைகள் எழுத்து பயிற்சியை தொடங்கினர்.

The post தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி: அரிசியில் தமிழ் எழுத்துகளை எழுதி குழந்தைகள் எழுத்துப் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: