காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 6 கிலோ நகை கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது: 3 கோடி தங்கம், ரூ.19 லட்சம், 4 சொகுசு கார் பறிமுதல்

காரிமங்கலம்: கோவையைச் சேர்ந்த பிரசன்னா நகைக்கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சுமார் 6 கிலோ தங்க நகைகளை வாங்கிக் கொண்டு, அவரது கடை ஊழியர்கள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் காரில் திரும்பினர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டிஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது, பின்னால் 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து, ஊழியர்களை மிரட்டி இறக்கி விட்டு, நகை மற்றும் ரொக்கத்துடன் காரையும் கடத்திச் சென்றனர்.

தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கு மேல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுஜித்(29), சரத்(33), பிரவீன் தாஸ்(33) ஆகியோரை, கோவையில் போலீசார் கைது செய்தனர். மேலும், சிகாபுதீன்(36), சைனு(30), அகில்(30), சஜீஷ்(35) ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளிகளான அந்தோணி, சிரில் ஆகியோரை சென்னையில் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம், ரூ.19.50 லட்சம் பணம் மற்றும் 4 சொகுசு கார்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

The post காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 6 கிலோ நகை கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது: 3 கோடி தங்கம், ரூ.19 லட்சம், 4 சொகுசு கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: