தஞ்சை அருகே வங்கியில் அடகு வைத்தது 68 கிராம் 2 கிராம் ‘கவரிங்’ போனஸ்: திரும்ப பெற்றவர் ஷாக்

தஞ்சாவூர்,அக்.22: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூரை சேர்ந்தவர் பாலு. இவர் ஒரத்தநாட்டில் உள்ள அரசுடைமை வங்கியில் 2 ஆண்டுக்கு முன் ஒரு நெக்லஸ், இரண்டு மோதிரம், மூன்று செயின் என 68 கிராம் எடையுள்ள நகைகளை அடகு வைதது ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் பெற்றுள்ளார். தொடர்ந்து நகைகளை ரூ.1 லட்சத்து 76 ஆயிரம், பின்னர் ரூ. 1லட்சத்து 91 ஆயிரத்துக்கு மாற்றி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வங்கிக்கு சென்று வட்டியுடன் சேர்த்து 1லட்சத்து 93,800 ரூபாய் கட்டி நகைகளை திருப்பியுள்ளார். அந்த நகைகளின் எடை போட்டபோது 70 கிராம் இருந்தது.

இதனால் பாலு அதிர்ச்சிடைந்து நகைகளை சரி பார்க்கும் போது அதில் 2.5 கிராம் செயின் கவரிங் என்பது தெரிய வந்தது. இது குறித்து வங்கி ஊழியர்களிடம் கேட்ட போது இதுதான் உங்கள் நகை எடுத்து செல்லுங்கள் என அலட்சியமாக கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலு ஒரத்தநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலுவுக்கு கொடுக்கப்பட்டது கவரிங் செயின் என்பதை உறுதியானது. மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்ட போது, இது குறித்து உயர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து எதுவும் கூறமுடியாது என்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட பாலு கூறுகையில், இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இதில் எவ்வளவு மோசடி நடந்திருக்கிறது என்பது தெரியவில்லை. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

The post தஞ்சை அருகே வங்கியில் அடகு வைத்தது 68 கிராம் 2 கிராம் ‘கவரிங்’ போனஸ்: திரும்ப பெற்றவர் ஷாக் appeared first on Dinakaran.

Related Stories: