டிரைபெட் நிர்வாக இயக்குனர் நீக்கம்: ஒன்றிய பழங்குடியினர் அமைச்சகத்தில் மோதல்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (டிரைபெட்) தலைவர் ராம்சிங் ரத்வா. இது அரசு சாரா பதவி ஆகும். இதன் நிர்வாக இயக்குனர் கீதாஞ்சலி குப்தா ஐஏஎஸ் ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளான அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமம், சகாகர் பாரதி ஆகிய அமைப்புகளின் சார்பில் ராம்சிங் ரத்வாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில்,டிரைபெட்டின் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இது பற்றி விவாதிக்க அதிகாரிகளின் கூட்டத்தை டிரைபெட் தலைவர் கூட்டினார். அதில், கீதாஞ்சலியும் இதர அதிகாரிகளும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து, கீதாஞ்சலி குப்தாவை சஸ்பெண்ட் செய்து ராம்சிங் ரத்வா உத்தரவிட்டார். இந்த உத்தரவு செல்லாது என ஒன்றிய பழங்குடியினர் விவகார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. டிரைபெட்டின் தலைவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறார். அதிகாரிகளை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

The post டிரைபெட் நிர்வாக இயக்குனர் நீக்கம்: ஒன்றிய பழங்குடியினர் அமைச்சகத்தில் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: