குற்றதடுப்புபிரிவு போலீசார் அறிவுறுத்தல் வெ.விரகாலூர் பட்டாசு ஆலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஆய்வு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வெ.விரகாலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்ததையடுத்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் வெ.விரகாலூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 9ம்தேதி காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விபத்து நிகழ்ந்தது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகா ஆகியோரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வெடிவிபத்தில் உயிரிழந்த அண்ணாநகர் பகுதி தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம், குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதலை தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தொழில்துறை பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் உடனிருந்தனர்.

 

The post குற்றதடுப்புபிரிவு போலீசார் அறிவுறுத்தல் வெ.விரகாலூர் பட்டாசு ஆலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: