பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிக்கு இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் விருது

 

ஈரோடு, அக்.20: பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரிக்கு ‘இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ்’ விருது வழங்கப்பட்டது. பாரதரத்னாமுனைவர்எம்.விஸ்வேஸ்வரய்யாவின் 163-வது பிறந்தநாளின் நினைவாக இன்ஸ்டிடியூஷன்ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) ஈரோடு சென்டர் 56-வது பொறியாளர்கள் தினத்தை கொண்டாடியது. விழாவிற்கு தமிழ்நாடு மின்வாரியத்தின் ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி தலைமை வகித்தார். இந்த விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலுசாமி பொறியியல் மற்றும்தொழில்நுட்பத்துறையில்சிறப்பானபங்களிப்பிற்காக அவுட் ஸ்டாண்டிங் என்ஜினீயர் விருது வழங்கப்பட்டது. மேலும், கொங்குபொறியியல் கல்லூரி மெகாட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பேராசிரியர் முனைவர் சங்கர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் முனைவர் ராஜசேகர், கெமிக்கல் இன்ஜினியரிங் இணை பேராசிரியர் முனைவர் செந்தில்குமார் ஆகியோரின் கல்வி சேவையைபாராட்டி ,பெஸ்ட் என்ஜினீயர் அகாடெமிக்ஸ் விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் யூஆர்சி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் தேவராஜன், ஈரோடு மண்டல ஐஈஐ தலைவர் முனைவர் நல்லுசாமி, கவுரவ செயலாளர் முனைவர் குமரவேலன் மற்றும் ஐஈஐ -யின் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கல்லூரி தாளாளர் ஏ.கே.இளங்கோ, கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளை பாரம்பரிய உறுப்பினர்கள் விருது பெற்றவர்களை பாராட்டினர்.

The post பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிக்கு இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் விருது appeared first on Dinakaran.

Related Stories: