அதானி குழுமம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக பின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மக்களின் அத்தனை வருமானங்களும் அதானியின் பாக்கெட்டுகளுக்கு நேரடியாக செல்கிறது.
அதானி குழுமத்தை பிரதமர் பாதுகாப்பதால் முறைகேடு:
பிரதமர் மோடி, அதனை குழுமத்தை பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு வைத்துள்ளார். அதானி குழும முறைகேடு பற்றி பைனான்சியல் டைம்ஸ் இதழ் வெளியிட்ட கட்டுரையை சுட்டிக்காட்டி ராகுல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? ராகுல் காந்தி
நிலக்கரி இறக்குமதி மூலம் அதானி குழுமம் 12,000 கோடி முறைகேடு செய்துள்ளது. அதானி குழும முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? . அதானி குழும முறைகேடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
The post அதானி குழும முறைகேடு: பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?.. பிரதமரால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார் அதானி: ராகுல்காந்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.
