ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சட்டமன்ற நாயகர் – கலைஞர் கருத்தரங்கம்

ஜெயங்கொண்டம்:முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, “சட்டமன்ற நாயகர் – கலைஞர்” கருத்தரங்கம், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் சிறப்புரையாற்றி கருத்தரங்கத்தில் சிறப்பாக பேசிய மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.நிகழ்வில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாச்சியர்கள் துரை, கலைவாணன், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, தஞ்சாவூர் மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜ்,கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர்,ஒன்றிய கழக செயலாளர் தனசேகர், நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், துணைத்தலைவர் வெ.கொ.ருணாநிதி மற்றும் அரசு அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

The post ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சட்டமன்ற நாயகர் – கலைஞர் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: