69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு..!!

டெல்லி: இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருதை வழங்கினார். இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று டெல்லியில் 69வது தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கினார். அதில், கருவறை என்ற குறும்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். மேலும், கடைசி விவசாயி’ படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்பட தேசிய விருதை மணிகண்டன் பெற்றார். ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படத்திற்காக சிறந்த கல்வி திரைப்பட தேசிய விருதை பி.லெனின் பெற்றார்.

The post 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு..!! appeared first on Dinakaran.

Related Stories: