காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். அதிநவீன சிகிச்சைகளுடன் 50 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டடம் விரைவில் அமைய உள்ளது என்று தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

அக்டோபர் 17, 2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் கிராம பஞ்சாயத்துகளில் நீர்வளத்துறை மூலம் நடைபெற்று வரும் வெள்ளத்தை தணிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அதில் மழைநீர் வடிகால் பணி, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டம், கெருகம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர், வடிநீர் கால்வாய் பணியினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள மணப்பாக்கம் மற்றும் முகலிவாக்கம் பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் ஊராட்சிகளுக்கும் இது மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும். பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் வாய்க்கால்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இது முடிவடைந்ததும் போரூர் ஏரியின் உபரி நீரை வெளியேற்ற உதவும்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கு.அசோகன், கொசஸ்தலையார் வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுபணிதிலகம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சரவண கண்ணன் ஆகியோர் உள்ளனர்

 

The post காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா appeared first on Dinakaran.

Related Stories: