நொய்டா கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான சுரிந்தர் கோலியை 12 வழக்குகளில் இருந்து விடுவித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்

உத்தரபிரதேசம்: 2005-06 ஆண்டுகளில் நொய்டாவில் நடந்த தொடர் கொலைகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி சுரிந்தர் கோலி விடுதலை செய்யப்பட்டார். டெல்லி நொய்டாவை அடுத்த நிதாரியில் 14 வயது சிறுமி ரிம்பா ஹல்தர் கொல்லப்பட்ட சம்பவம் கடந்த 2006ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, சுரீந்தர் கோலி மற்றும் தொழிலதிபர் மொணீந்தர் சிங் பாந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வீட்டருகே தோண்டிய போது ஏராளமான சிறுமிகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கோலி குழந்தைகளை வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு இனிப்புகள் மற்றும் சாக்லேட்களை வழங்கி, கொலை செய்து, சடலங்களுடன் உடலுறவு கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் நரமாமிசம் உண்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.இருவருக்கு எதிராக 2007ம் ஆண்டில் 19 வழக்குகளை பதிவு செய்தது.

இதுபற்றிய விசாரணையில், சிங்கின் வீட்டில் கோலி பல்வேறு சிறுமிகளை பலாத்காரம் மற்றும் கொலை செய்தது கண்டறியப்பட்டது. இதில், விசாரணை நீதிமன்றத்தில் கோலிக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு எதிராக 12 வழக்குகள் உள்ளன. வழக்கின் மற்றொரு குற்றவாளியான பாந்தருக்கு எதிராகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர் 2 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சுரீந்தர் கோலி மற்றும் மொனீந்தர் சிங் பாந்தர் ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்து உள்ளது.

 

The post நொய்டா கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான சுரிந்தர் கோலியை 12 வழக்குகளில் இருந்து விடுவித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: