குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடி மரத்திற்கு தர்ப்பை புல் கொண்டு அலங்காரம் செய்து 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். 11 நாட்கள் நடைபெறும் திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடி பட்டம், வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றபட்டது. பின்னர் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றிலான காப்புகள் அணிவிக்கப்பட்டு வருகிறது.

காப்பு கட்டிய பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வீதி விதியாக அம்மனுக்கு காணிக்கை வசூலித்து பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இன்று முதல் அக்டோபர் 25ம் தேதி வரை தினமும் காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளன. கோயில் கலையரங்கத்தில் தினமும் மாலையில் திருமுறை, இன்னிசை, சமய சொற்பொழிவு ,கோலாட்டம், பரதநாட்டியம், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வருகிற 24ம் தேதி சிரக நிகழ்வான மகிஷா சூரசம்காரம் நடைபெறுகிறது அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளும் அம்மன் பல்வேறு உருவங்களில் வரும் மகிஷாசுரனை வதம் செய்கிறார். அக்டோபர் 25ம் தேதி அதிகாலையில் கடற்கரை மேடை சிதம்பரேஸ்வரர் கோவில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகிறது. இதையடுத்து காலை 6 மணிக்கு பூஞ்சபரத்தில் அம்மன் வீதி உலா வந்து மாலையில் கொடி இறக்கம் நடைபெறுகிறது. இதை எடுத்து பக்தர்கள் தங்கள் வேடங்களை கலைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: