காரைக்குறிச்சி அரசு பள்ளியில் கலை திருவிழா

தா.பழூர்:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான பள்ளி அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கலியபெருமாள் தலைமை வகித்தார். இதில் போட்டி ஒருங்கிணைப்பாளராக சேகர் மற்றும் செந்தமிழ் செல்வி ஆகியோர் பணியாற்றினர். இதில் மாணவர்களுக்கான இசைக்கருவி வாசித்தல், கிராமிய நடனம், நாடகம், நுண்கலை, பேச்சுப்போட்டி, கவிதை, கதை சொல்லுதல், கட்டுரை, திருக்குறள், கையெழுத்துப் போட்டி, பாட்டு போட்டி, ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த மாணவர்கள் அடுத்த கட்ட வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

The post காரைக்குறிச்சி அரசு பள்ளியில் கலை திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: