தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் கணினி துறை பயிற்சி வகுப்பு துவங்க ஐசிடி அகாடமி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மதுரையில் நடை பெற்ற தமிழ்நாடு இன்பர்மேஷன் கம்யூனிக்சேன் டெக்னாலஜி அகாடமியின் (ஐசிடி அகாடமி) சார்பில் பிரிட்ஜ் 2023ன் 52வது பதிப்பு மாநாடு நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் வழிகாட்டுதலின் படி கல்லூரி சார்பாக முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா உட்பட கல்லூரி பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். “டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல்” என்பதே இக்கருத்தரங்கின் மையபொருளாகும். நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்து பேசுகையில், மனித மூலதனத்தை பெருக்கி டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சாத்திய கூறுகளை எடுத்துரைத்தார். கருத்தரங்கில் பல்வேறு மென்பொருள் நிறுவனத் தலைவர்கள், ஐ.சி.டி அகாடமி நிறுவனர் மற்றும் நிர்வாக துணைத்தலைவர்கள், ஐ.சி.டி அகாடமியில் உறுப்பினர்களாக உள்ள முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் கணினி துறை பயிற்சி வகுப்பு துவங்க ஐசிடி அகாடமி நிறுவனத்துடன் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: