வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை

பணகுடி,அக்.13: நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த 5, 6 தேதிகளில் நடந்தது. இதில் 150 பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் ஆண்கள் பிரிவில் 98 புள்ளிகளும், பெண்கள் பிரிவில் 208 புள்ளிகளும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும் பள்ளித் தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி பிள்ளை மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் என ஏராளமானோர் வெகுவாகப் பாராட்டினர்.

The post வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: