காமராஜர் பெயரில் கல்லூரி உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டம்: அரசுக்கு சமத்துவ மக்கள் கழகம் வாழ்த்து

சென்னை: சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏழை, எளிய மக்கள், மாணவர்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் காமராஜர். ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு உதவித்தொகை என மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

நேற்று சட்டப்பேரவையில் கல்லூரிகளுக்கிடையே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி வளர்ச்சிக்காக முதல்வர் எடுக்கிற பல்வேறு திட்டங்கள் காமராஜர் பெயரிலேயே அமைந்துள்ளது என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில்கூறியுள்ளார்.

The post காமராஜர் பெயரில் கல்லூரி உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டம்: அரசுக்கு சமத்துவ மக்கள் கழகம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: