அனல்மின் நிலைய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க வளர்ச்சி, கல்வி நிதி வழங்கல்

தூத்துக்குடி, அக். 12: தூத்துக்குடி அனல்மின் நிலைய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி நிதிக்கான காசோலை சரக துணை பதிவாளரிடம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி அனல்மின் நிலைய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2020-21ம் ஆண்டுக்கான லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 870 மற்றும் கல்வி நிதிக்கான தொகை ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 247 என மொத்தம் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 117க்குரிய காசோலையை சங்கத்தின் செயலாட்சியர் தனலெட்சுமி தூத்துக்குடி சரக துணை பதிவாளர் ரவீந்திரனிடம் வழங்கினார். அப்போது தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் சாம்டேனியல்ராஜ், சங்கத்தின் செயலாளர் கொம்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

The post அனல்மின் நிலைய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க வளர்ச்சி, கல்வி நிதி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: