அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு, அக். 12: ஈரோட்டில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் எதிரே தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவையினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பேரவையின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், அரசு போக்குவரத்து கழக ஈரோடு 3-வது கிளை, கொடுமுடி கிளையில் ஓட்டுநர்களின் ஊதியத்தில் பண பலன்களை இழக்கச்செய்வது, வீண் குற்றச்சாட்டு, குறிப்பாணை வழங்குவது, தவறான உத்தரவுகளை பிறப்பிப்பது போன்றவற்றை கைவிட வலியுறுத்தியும், கிளை நிர்வாகங்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி, அம்பேத்கர் படத்தை மார்பில் அணிந்தும், கருப்பு நிற துணியால் கண்களை மூடியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: