கலைஞர் பிறந்தநாளையொட்டி முதியோர் காப்பகத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம்

 

ஈரோடு, ஜூன் 4: கலைஞர் பிறந்தநாளையொட்டி முதியோர் காப்பகத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மதிய உணவு வழங்கினார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவையொட்டி பெருந்துறை தொகுதி திமுக சார்பில் முதியோர் காப்பகத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மதிய உணவு வழங்கி கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் பாலகிருஷ்ணன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வம், துணை தலைவர் சரவணன், பேரூர் செயலாளர் அகரமூர்த்தி, பெருந்துறை பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகம், யூனியன் கவுன்சிலர்கள் ஹேமலதா சம்பத், நவபாரதி, திருவாச்சி ஊராட்சி தலைவர் சோளிபிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் கோகுல், ராஜேந்திரன்,

சுப்பிரமணி, அன்புச்செல்வி, கிருஷ்ணன், சரண்யா சுரேஷ், சித்திக், காமராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் சரஸ்வதி துரைராஜ், சோளி சக்திவேல், குருசாமி, நாகராஜ், கதிரேசன், குமார், மோகன், சதீஷ் தங்கமுத்து, பொன்னுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாளையொட்டி முதியோர் காப்பகத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: