எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில் பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்(திமுக) பேசுகையில், திருவள்ளூர் மாவட்டம் தற்போது தொழில் துறையில் வளர்ந்துவரக்கூடிய பகுதியாக உள்ளது. ஏதோ ஐடி பார்க் என்றாலே சோழிங்கநல்லூர் அல்லது ஓஎம்ஆருக்கு தான் செல்ல வேண்டும். இங்கிருந்து சோழிங்கநல்லூர் பகுதிக்குச் செல்லவேண்டுமானால் கிட்டத்தட்ட 55 கி.மீ. தூரம் செல்லவேண்டியுள்ளது” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், சென்னை மாநகருக்கு அருகில் அமைந்துள்ள ஆவடி தாலுகா பட்டாபிராமில் 11.41 ஏக்கர் நில பரப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை டைட்டல் பார்க் நிறுவனம் நிறுவி வருகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 5.57 லட்சம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 21 அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

வி.ஜி.ராஜேந்திரன்: முதல்வர் திருவள்ளூர் தொகுதியிலே ஒரு ஐடி பார்க் அதாவது தொழில்நுட்ப பூங்காவையும் அவர் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: ஒரு மாவட்டத்தில் ஒரு பெரிய நிறுவனமோ அல்லது தொழில் அதிபர்களோ முன் வந்தால் அவர்களுக்கு ஏற்ப ஒரு வசதி பூங்கா அல்லது ஒரு கட்டிடம் உருவாக்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அதை முயற்சி செய்வோம்.

The post எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில் பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா appeared first on Dinakaran.

Related Stories: