டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது

டெல்லி: காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடக்கம் தொடங்கியது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. நாளை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் இன்றே காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூடியது. காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூடியது.

காவிரியில் 15 நாட்களுக்கு தினசரி வினாடிக்கு 13,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்க தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர். காவிரி தொழில்நுட்ப குழுவை சேர்ந்த பட்டாபிராமன் உள்ளிட்டோரும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு தினசரி வினாடிக்கு 13,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணிய உத்தரவை ரத்து செய்ய கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரியில் நீர் திறக்க முடியாது என பேரவையில் தீர்மானம் கொண்டு வர கர்நாடக திட்டமிட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. தமிழகத்திற்கு நீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அதிகாரிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்படி நீர் திறக்க முடியாது கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது. புதிய பார்முலாவை பின்பற்றி நீர் பற்றாக்குறை அளவீட்டு பட்டியலை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

 

The post டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: