அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்னைகளை தீர்க்க கேரளாவில் 3 அடுக்கு குழு: முதல்வர் பினராய் திடீர் முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பிரச்னைகளை தீர்க்க 3 அடுக்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு-கேரளா இடையே முல்லை பெரியாறு, பரம்பிகுளம்- ஆழியாறு, நெய்யாறு உள்பட பல்வேறு நதிநீர் பிரச்னைகள் உள்ளன. இதேபோல், கர்நாடக மாநிலத்துடன் காவிரி நீர் பிரச்னை உள்ளது. இந்த பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாக ஏற்கனவே கேரள அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில், மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்னைகளை தீர்க்க, 3 அடுக்கு குழுவை நியமிக்க, முதல்வர் பினராய் விஜயன் திடீர் முடிவு எடுத்துள்ளார். இதற்கு கேரள அமைச்சரவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குழுவுக்கு முதல்வர் பினராய் விஜயனும், மற்றொரு குழுவுக்கு தலைமை ெசயலாளரும், 3வது குழுவுக்கு சட்டத்துறை இயக்குநரும் தலைவர்களாக இருப்பார்கள். இந்த 3 குழுக்களும் நதிநீர் பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. …

The post அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்னைகளை தீர்க்க கேரளாவில் 3 அடுக்கு குழு: முதல்வர் பினராய் திடீர் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: