புதுவையில் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்கள் மீட்பு: சைபர் கிரைம் போலீசார் அதிரடி

 

புதுச்சேரி, அக். 8: புதுச்சேரியில் காணாமல் போன 70 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பொதுமக்கள் தங்கள் செல்போன்கள் காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, சைபர் கிரைம் பிரிவு போலீசார் உதவியுடன் காணாமல் போன செல்போன்களை, அவற்றின் ஐபி முகவரி மற்றும் ஐஎம்இஐ எண்கள் மூலம் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன செல்போன்கள் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல்துறை தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் டிஐஜி பிரிஜேந்திரகுமார் யாதவ் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் தங்களது செல்போனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது ரூ.12 லட்சம் மதிப்பிலான 70 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் காணமால் போன செல்போன் மற்றும் வட மாநிலத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் செல்போன்களும் மீட்கப்பட்டு கூரியர் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

The post புதுவையில் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்கள் மீட்பு: சைபர் கிரைம் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: