காட்டுமன்னார்கோவில் அருகே 7 ஜோடிகளுக்கு கோலாகல திருமணம்: தமிழ்நாடு பண்பாடு, உபசரிப்பை நேரில் வியந்து ரசித்த ஜப்பான் தம்பதிகள்

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற திருமண விழாவில் ஜப்பானில் இருந்து வருகை தந்த தம்பதியினர் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டினர் வாழையிலையில் பரிமாறிய உணவுகளை ருசித்து சாப்பிட்டனர். கிராமத்தில் 7 ஏழை ஜோடிகளுக்கான திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் விருந்தினராக ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையை கட்டி வந்த அவர்களுக்கு வாழை இலையில் வடை, இட்லி, பொங்கல், பூரி, கேசரி என பரிமாரியதை ருசித்து சாப்பிட்டனர். திருமண ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் மக்கள் ஜெண்ட மேளம் முழங்க துள்ளல் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு கிராம மக்கள் ஒன்றுகூடி பூசணிக்காய் உடைத்து திருஷ்ட்டி களித்தனர். இதனால் நெகிழ்ந்து போன ஜப்பான் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி வணக்கங்கள் கூறியும் பிரிய மனம் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

The post காட்டுமன்னார்கோவில் அருகே 7 ஜோடிகளுக்கு கோலாகல திருமணம்: தமிழ்நாடு பண்பாடு, உபசரிப்பை நேரில் வியந்து ரசித்த ஜப்பான் தம்பதிகள் appeared first on Dinakaran.

Related Stories: