ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்… இதுவரை 87 பதக்கங்கள்… சதமடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் வியட்னாம் அணியை 6-2 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரஜ்ஜித் கவுர் ஆகியோர் கொண்ட இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றுள்ளது.

இதனிடையே வங்காளதேசத்துக்கு எதிரான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 9.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். இந்திய அணி இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவில் பதக்க எண்ணிக்கையில் இந்தியா சதமடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்… இதுவரை 87 பதக்கங்கள்… சதமடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: