கும்பகோணம் அருகே பருத்தி ஏலம் ரூ.36 லட்சத்துக்கு வர்த்தகம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொட்டையூரில் தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 637 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 600 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ரூட்டி, விழுப்புரம், சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளை சார்ந்த 7 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.36 லட்சம் ஆகும். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7,069, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,509, சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,169 என்ற விலைக்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

The post கும்பகோணம் அருகே பருத்தி ஏலம் ரூ.36 லட்சத்துக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: