சிப்காட் கழிவு நீரால் ஓடைகள் பாதிப்பு

 

ஈரோடு, அக்.4: பெருந்துறை சிப்காட் வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் நள்ளாஓடை, குட்டப்பாளையம், ஓடைக்காட்டூர் குளம், கண்ணாய்காடு குட்டை, புஞ்சை பாளத்தொளுவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் சிப்காட் அலுவலர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களை சந்தித்து தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது, திமுக பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி, சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், மாவட்ட கவுன்சிலர் செல்வம், சென்னிமலை ஒன்றிய சேர்மன் காயத்ரி இளங்கோவன், பனியம்பள்ளி ஊராட்சி தலைவர் சிவக்குமார், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

The post சிப்காட் கழிவு நீரால் ஓடைகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: