திருவள்ளூர் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவுக்கார வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36). இவர் தனியார் தொழிற்சாலையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவரின் மகளான 11 வயது சிறுமி ராஜேஷின் வீட்டிற்கு அடிக்கடி விளையாட வந்ததாக கூறப்படுகிறது.

விளையாட வந்தபோதெல்லாம் அச்சிறுமியிடம் ராஜேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கடம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட கடம்பத்தூர் போலீசார், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருவள்ளூர் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: