இரு மகள்களையும் 4 ஆண்டாக பலாத்காரம் செய்த தந்தை: உத்தர பிரதேசத்தில் நடந்த கொடூரம்

காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் தனது இரு மகள்களையும் 4 ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் வசிக்கும் 40 வயது நபருக்கு 15, 17 வயதுடைய இரு மகள்கள் உள்ளனர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது இரண்டு மைனர் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமிகளின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ேபாலீஸ் ஏசிபி நரேஷ் குமார் கூறுகையில்:
‘15 மற்றும் 17 வயதுடைய இரு மகள்களையும் கைது செய்யப்பட்ட தந்தை கடந்த 4 ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகள், பள்ளிக்கு அரை மனதுடன் சென்று வந்தனர். தொடர்ச்சியாக பள்ளிக்கு அவர்கள் வராததால், இதுகுறித்து அவர்களிடம் பள்ளி ஆசிரியர் கேட்டார். அதற்கு அந்த மாணவிகள், தங்களது தந்தையின் பாலியல் கொடுமை குறித்து எடுத்து கூறினர்.

அதிர்ச்சியடைந்த ஆசிரியர், இவ்விவகாரம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விசாரணை நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர். அந்த சிறுமிகளின் தாய் மட்டுமே கூலி வேலை ெசய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். தந்தை வேலைவெட்டி இல்லாமல் சுற்றித் திரிந்து வந்துள்ளார்’ என்றார்.

The post இரு மகள்களையும் 4 ஆண்டாக பலாத்காரம் செய்த தந்தை: உத்தர பிரதேசத்தில் நடந்த கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: