தர்மபுரி அருகே செக்ஸ் டார்ச்சர் தகராறில் மனைவி குத்திக்கொலை: கணவர் தற்கொலை முயற்சி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே செக்ஸ் டார்ச்சர் தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற கணவர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (62). விவசாயி. இவரது மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பெருமாளும், தனமும் கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்தனர். பெருமாள் தினமும் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவி இடையே செக்ஸ் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனத்தை தாயார் மற்றும் 3 சகோதரர்கள் சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டிற்கு நேற்று அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பெருமாள் மீண்டும் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பெருமாள் தனது லுங்கியால் மனைவி தனத்தின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர், அருகில் கிடந்த சூரி கத்தியால் மனைவியின் வயிறு மற்றும் உடலில் ஆவேசமாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனம் அதே இடத்திலேயே இறந்தார். இதை கண்ட பெருமாள், கத்தியால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து, தனத்தின் பெற்றோர் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில் விரைந்து வந்த போலீசார், கொலையான தனத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து பெருமாளை கைது செய்து, அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செக்ஸ் டார்ச்சர் தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று, கணவர் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தர்மபுரி அருகே செக்ஸ் டார்ச்சர் தகராறில் மனைவி குத்திக்கொலை: கணவர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: