செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலியாட்கள் 20 பேர் திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகி வாதாடிய திருப்பதியை சேர்ந்த வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவிற்கு சொந்தமான யோகிமல்லவரத்தில் உள்ள அவரது வீடு, கூடூர் அடுத்த பாலய்யக்காரி கிராமத்தில் உள்ள வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருவதால், ஆந்திரா, தெலங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post 20 தமிழர்கள் என்கவுன்டரில் வாதாடிய வக்கீல் வீடு உட்பட 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: ஆந்திரா, தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.
