ஓபிஎஸ் பாஜவில் இணைப்பா? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி

கோவை: ஓபிஎஸ்சை பாஜவில் இணைப்பது பற்றி கோவையில் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். கோவை டவுன்ஹாலில் உள்ள சர்வோதயா சங்கம் காதி பவனில் காந்தி ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காதி விற்பனை ரூ.33,000 கோடியில் இருந்து 9 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜி20-யில் அனைத்து விருந்தினர்களுக்கும் நமது நாட்டில் பாரம்பரிய முறைப்படி அந்தந்த பகுதியில் கிடைக்கக்கூடிய பொருட்கள் பரிசளிக்கப்பட்டது.

டெல்லியில் நேற்று மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கட்சி தேசிய தலைமை, முக்கியமான தலைவர்களை சந்தித்து கூட்டத்தில் கலந்துகொண்டது சிறப்பாக இருந்தது. சட்டீஸ்கர் மாநிலம், ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ப.சிதம்பரம் 33 சதவீத மகளிர் சட்ட மசோதா அமலுக்கு வராது என்று கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சி இருந்த மனநிலையிலே இருந்து அவர் பேசி வருகிறார். ஓபிஎஸ்சை பாஜவில் இணைப்பது பற்றி எனக்கு தெரியாது. ஒன்றிய நிதி அமைச்சர் நாளை கோவை வருகிறார். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

The post ஓபிஎஸ் பாஜவில் இணைப்பா? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: