ஏராளமான பொதுமக்கள் பரிசோதனை செய்து பயன் வேலை செய்த வீட்டில் கைவரிசை 5 பவுன் செயின் திருடிய பெண் கைது

தில்லைநகர்: திருச்சியில் வேலை செய்த வீட்டிலேயே 5 பவுன் செயின் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர் சீனிவாசாநகர் 2வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மனைவி நந்தினி (29). இவர்களது வீட்டில் விருதுநகர் சிவகாசி சந்தானந்தபுரம் பகுதியை சேர்ந்த கற்பகவள்ளி (57) என்பவர் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இடையில் வேலையை விட்டு நின்ற அவர் கடந்த 27ம் தேதி மீண்டும் நந்தினியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நந்தினி வீட்டை பூட்டிவிட்டு தனக்கு வந்த கூரியர் தபாலை வாங்குவதற்காக வெளியே சென்று உள்ளார். இதனால் கற்கபவள்ளி வீட்டிற்குள் புகுந்து ஐந்து பவுன் செயினை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார். அதேநேரத்தில் நந்தினி வந்ததால் கற்பகவள்ளியை கையும், களவுமாக பிடித்தார். சம்பவம் குறித்து உறையூர் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், போலீசார் கற்பகவள்ளியை கைது செய்து, அவரிடம் இருந்து 5 பவுன் செயினை மீட்டனர்.

The post ஏராளமான பொதுமக்கள் பரிசோதனை செய்து பயன் வேலை செய்த வீட்டில் கைவரிசை 5 பவுன் செயின் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: