வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு குறித்து வீடு வீடாக பிரச்சாரம்: எஸ்டிபிஐ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

 

ஈரோடு, செப். அக். 2: வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு குறித்து வீடு வீடாகப் பிரச்சாரம் மேற்கொள்வது என எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ, கட்சியின் சார்பில் எதிர் வரும் டிசம்பர் மாதம் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்ற முழக்கத்தோடு மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் முனாப் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாஷா, ஜமால்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மதுரையில், டிசம்பரில் நடைபெறவுள்ள வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாட்டின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இம்மாநாட்டுக்கு, ஈரோடு தெற்கு மாவட்டத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது. அதற்காக, வார்டு, நகர மற்றும் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு குறித்து வீடு வீடாக பிரச்சாரம்: எஸ்டிபிஐ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: