உலக முதியோர் தினவிழா

கிருஷ்ணிரி: கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், உலக முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்து கேக் வெட்டினார். அவர் பேசுகையில், ‘அவசர உலகில் இன்று நம்மை வளர்த்து ஆளாக்கியவர்களை கவனிக்க தவறியதன் விளைவாக, ஆதரவற்ற இல்லங்களில் தஞ்சமடைய வைத்துள்ளோம். இது போன்ற அவலங்களை தவிர்த்து, பெற்றோர்களை பேணி காக்க வேண்டும். மேலும், முதியோர் இல்லங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். குறிப்பாக பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், ஆதரவற்ற இல்லங்களில் தஞ்சடைந்துள்ள முதியோர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகையை முதல்வர் வழங்க வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், நுகர்வோர் சங்க மாவட்ட செயலாளர் விக்னேஷ், இல்ல சமூக சேவகர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இல்ல பாதுகாவலர் ஆனந்தி நன்றி கூறினார்.

The post உலக முதியோர் தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: