கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக தமிழ்நாடு முழுவதும் 8 மாதங்களில் 9,634 குற்றவாளிகள் கைது: 17,330 கிலோ கஞ்சா பறிமுதல், போலீஸ் அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 9,634 பேரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 17,330 கிலோ கஞ்சா, 726 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் ேநற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போதை பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் வரை மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 6,824 வழக்குகள் பதிவு ெசய்யப்பட்டு, 812 வெளிமாநில குற்றவாளிகள் உட்பட மொத்தம் 9,634 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 17,330 கிலோ கஞ்சா, 726 கிராம் ஹெராயின், 24,511 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,304 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 5 முதல் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 137 குற்றவாளிகள் தடுப்பு காவல் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கடந்த 12.9.2023 முதல் 28.9.2023ம் தேதி வரை மாநிலம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததாக, 8 பெண்கள் உட்பட 223 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 40 லட்சம் மதிப்புள்ள 386 கிலோ கஞ்சா, 85 கிராம் மெத்தாபிடமின், 690 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்கள் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி உண் 10581 மூலமாகவும், 9498110581 என்ற எண்ணில் வாட்ஸ் அப் குறுந்தகவல் மற்றும் புகைப்படம் மூலமாகவும், spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக தமிழ்நாடு முழுவதும் 8 மாதங்களில் 9,634 குற்றவாளிகள் கைது: 17,330 கிலோ கஞ்சா பறிமுதல், போலீஸ் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: