மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்க பயிற்சி

 

சமயபுரம், செப்.30: மண்ணச்சநல்லூர் சா அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சமயபுரம் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு செயல்விளக்க பயிற்சி மற்றும் பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் சா.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து ஏற்படும் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மேலும் எண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்தும், அவசர காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல்விளக்க பயிற்சி முகாம், பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமையில், சமயபுரம் முன்னணி தீயணைப்பு வீரர் பழனிச்சாமி, சுதர்சன், சதீஷ்குமார், தர்மராஜா மற்றும் பெரியசாமி ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

இதில் பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் போது தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முறை, தண்ணீரில் நனைக்கப்பட்ட சாக்கை பயன்படுத்தி தீ அணைக்கும் முறை, மணலை பயன்படுத்தி தீயை அணைக்கும் முறை போன்றவை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்க பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: